-எதிர்க்கட்சித் தலைவர்-
பாராளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னாவிடம் நேற்று வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கேள்விப்பட்டதாகவும், இவ்வாறு பாராளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து சபாநாயகரையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்; பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் அமைந்துள்ளதால், பாம்புகள் பாராளுமன்றத்திற்குள் நுழைகின்றதெனவும் சஜித் பிரேமதாஸா குறிப்பிட்டுள்ளார்.
ஏலவே, தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.


















