-பூநகரி பாடசாலையில் ஒருவர் இடைநிறுத்தம்-
-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உயர்தரப் பரீட்சை நிலையமாக செயற்படும் பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை மது போதையில் கடமையிலிருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பரீட்சை கடமைகளிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட குறித்த பாடசாலை பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் மதுபோதையில் இருந்தமை தொடர்பாக வலய கல்வி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் மதுபோதையில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளரை அப் பணியில் இருந்து உடனடியாக நீக்கி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.


















