இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த நடைமுறை நேற்றிலிருந்து அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இத்தாலியில் 6 வருடங்களாக வசித்து வரும் இலங்கையர்கள் இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற தகுதியுடையவர்கள் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.


















