ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிறந்த தினத்தையொட்டி நேற்று திங்கட்கிழமை ஜிந்துப்பிட்டி ஜெயந்தி நகர் முருகன் கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
கே.டி.குருசுவாமி, பழ. புஷ்பநாதன் மற்றும் கொழும்பு மாநகரசபை சுயாதீன அணியின் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி பூஜையின் போது சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















