30 வருட யுத்தத்தை தோற்கடிக்க இராணுவ வீரர்கள் ஆற்றிய உன்னத சேவையின் காரணமாகவே நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டு கூட, புறக்கோட்டையில் இவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், அங்கு சென்று இவர்களோடு கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைகள் கேட்டறிந்தோம். என்றாலும் இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை என எதிரக்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இராணுவ வீரர்களால் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதால், அவர்கள் ஏராளமான அநீதிகளை எதிர்கொள்கின்றனர். 2025 வரவுசெலவுத் திட்டத்தின் அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆயுதமேந்திய படை வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் திருத்தங்களுக்கு உள்ளாக்கினாலும், முப்படை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஊனமுற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் விதவைகளுக்கு கிடைக்க வேண்டி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மருத்துவ காரணங்களுக்காக ஓய்வு பெற்ற ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதற்கு சட்டபூர்வமான அடிப்படை காணப்பட்ட போதிலும், இவர்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்தபாடில்லை என்றும், அரசாங்கம் இந்த சலுகைகளை குறைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


















