ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சதுர கலப்பத்தி, அவ் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















