-அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தகவல்-
ஆசிரியர் கல்லூரியில் இருந்து வெளியேறிய 4131 பேர் இந்த ஆண்டு ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்:-
ஆசிரியர் கல்லூரியில் இருந்து வெளியேறிய 4131 பேர் இந்த ஆண்டு ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்பட்டது. ஆகவே அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் – அதிபர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.

















