புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய ஒரு டிங்கி படகை கடற்படையினர் கடந்த 20ஆம் திகதி கைப்பற்றினர்.
கடல் வழியாக பொருட்களை கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பாதைகளில் கடற்படை தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 20ஆம் திகதி புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேகத்துக்கிடமான ஒரு டிங்கி படகைக் கண்காணித்து, சோதனை செய்தனர்.
அவ்வேளை, 13 பைகளில் பொதிசெய்யப்பட்டு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன், அந்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் டிங்கி படகினை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

















