-சி.ஜெகதீஸ்வரன்-
காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிலங்குளம் – கொல்லங்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ் (வயது-11) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த திங்கட்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தொடர்ந்தும் காய்ச்சல், வலிப்பு குறையாத நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை உயிலங்குளம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.















