கடந்த 27ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக கண்டி, உடத்தவ, நெலும்மல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரின் இறுதிச் சடங்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
யாரும் எதிர்பாராத ஒரு கணத்தில், மலை உச்சியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்திற்குச் சரிந்து விழுந்த பாரிய மண் மேடு இந்த கிராமத்தை முழுமையாக மூடியிருந்தது.
மிகவும் அழகான நெல் வயல்களுக்கு மத்தியில் அமைந்திருந்த இந்தக் கிராமத்திற்கு மேலே அமைந்துள்ள யஹங்கல மலைத்தொடர் மற்றும் நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியே இவ்வாறு சரிந்து விழுந்தது.


















