-பல இடங்களில் தொடரும் மீட்புப் பணிகள்-
டித்வா பேரிடரினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தினசரி பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 437,507 குடும்பங்களை சேர்ந்த 1558,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1433 இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 61,875 குடும்பங்களை சேர்ந்த 232,752 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் 783 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 31,417 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இன்னும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பல இடங்களில் வெள்ளம் வற்றாத நிலையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத நிலை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


















