ரயில்வே திணைக்கள அதிபர்களை உள்ளீர்க்கும் வர்த்தமானியில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இவ்விடயம் குறித்து நேற்றையதினம் உயர்நீதிமன்றுக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தில் ரயில் ஓட்டுநர், ரயில் கட்டுப்பாட்டாளர், ரயில் நிலைய அதிபர் மற்றும் ரயில்வே மேற்பார்வை மேலாளர் பதவிகளுக்கும் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய, இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


















