-செ.சுமந்தன்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனத்தத்தினால் சேதமடைந்த மொபிட்டல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு வயர்களை வட்டுவாகல் பாலத்தின் கீழிருந்து மீட்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த வெள்ளப்பெருக்கின்போது இந்த வயர்கள் அனைத்தும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு அறுந்த நிலையிலேயே தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இருந்தும் தொலைத்தொடர்பு இணைப்பினை சீர்செய்த குறித்த நிறுவனம் வட்டுவாகல் பாலத்தில் வெள்ளத்தில் அள்ளுட்ட பைவர் லையினுக்குரிய வயர்களை சனிக்கிழமை மீட்டனர்.
குறித்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் வட்டுவாகல் பாலத்தினுள், ஓடும் தண்ணீருக்குள் இறங்கி, வயர்களை எடுத்து சீர்செய்யும் பணிகளை ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு கோட்டபாய கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்கி, வயர்களை மீட்டனர்.


















