ஒரு பாடசாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளை பொதி செய்த குற்றச்சாட்டில் பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தனமல்வில உவகுடா ஓயாவில் உள்ள சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். 28 வயதான இவர், செவனகல பகுதியில் உள்ள பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றுக்கின்றனர்.
அவருடன் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த ஆசிரியர் போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்களுக்கு விற்றாரா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


















