-சுகாதாரப் பிரதி அமைச்சர்-
புகையிலை மற்றும் மதுபானம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை சான்றிதழ் பாடநெறியை முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மது மற்றும் போதைப்பொருள் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளையும் அதிக எண்ணிக்கையிலான நோய்களையும் விளைவிப்பதால் இதற்காக அதிக அளவு பணம் செலவிட வேண்டியுள்ளது என்றும், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு மது மற்றும் போதைப்பொருட்களும் மூல காரணம்.
நாட்டின் சுகாதாரத் துறையின் ஒவ்வொரு அம்சத்தையும் பகுப்பாய்வு செய்யும் போது, புகையிலை மற்றும் போதைப்பொருள் காரணமாக மருத்துவமனையில் நேரடியாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதியில் பெரும் பகுதி சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டன.
மது மற்றும் போதைப்பொருட்களின் நேரடி அல்லது மறைமுக விளைவுகள் பரவலாக உள்ளன என்றும், இந்த சூழ்நிலைகள் சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு கடுமையான சவாலாக உள்ளன.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களில் இந்தத் தரவுகள் பதிவு செய்யப்படும்போது, அது தொற்றா நோய்கள், விபத்துகள் மற்றும் மனநோய்களிலிருந்து தனித்தனியாகப் பதிவு செய்யப்படுவதாகவும், இதன் வேர்கள் வேறு இடங்களில் இருப்பதால், சுகாதார அமைச்சகம் இந்தப் பிரச்சினையை ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.


















