-செ.ரவிசாந், ஞானத்தமிழ்-
அகில இலங்கை சைவமகா சபை திருவெம்பாவையை முன்னிட்டு நடாத்தும், வருடாந்த ஈழத்துச் சிதம்பர பாதயாத்திரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆன்மீக பாதயாத்திரை பல்வேறு இந்து ஆலயங்களைத் தரிசித்தவாறு சுழிபுரம், மூளாய், பொன்னாலை ஊடாக காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையும். பாத யாத்திரையில் சைவமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அகில இலங்கை சைவமகா சபையினர் கேட்டுள்ளனர்.


















