திருகோணமலை மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா தலைமையில், மாநகர ஆணையாளர் உ. சிவராசா மற்றும் செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் நேற்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அஜித்குமார் பாதீட்டை முன்மொழிய, மற்றொரு உறுப்பினர் குமாரகுலசிங்கம் அதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களினாலும் இப்பாதீடு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 25 உறுப்பினர்களைக் கொண்ட திருகோணமலை மாநகரசபையில் நேற்றைய அமர்வில் 20 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் சுகவீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் சமூகமளிக்கவில்லை.


















