உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கொழும்பு தங்கச் சந்தையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி,
24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்றின் விலை 354,000 ரூபாவாகவும்,
22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 327,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


















