டித்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.
அரசாங்கத்தின் இந்த துரித நடவடிக்கையின் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7,515 விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு150,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.
இதற்காக அரசாங்கம் 1,001 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது. இந்த நிதி விநியோகம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இது வெறும் நஷ்டஈடு மாத்திரமல்ல எனத் தெரிவித்தனர். சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், எவ்வித சுணக்கமுமின்றி மீண்டும் பயிர்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஒரு ஊக்கிவிப்பாக அமைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.


















