மறைந்த பிரபல நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்கவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி நேற்றுக் காலை சதிஷ்சந்திர எதிரிசிங்கவின் பூதவுடல் வைக்கப்பட்ட களனியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பலரும் ஜனாதிபதியுடன் கலந்துகொண்டனர்.


















