-இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது – RDA-
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் சேதமடைந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியிலுள்ள பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதியானது, இப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகளுக்கும், தோட்டத்துறையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியமான ஒரு பாதையாகும். கடந்த வாரம் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இந்தப் பாலம் பலத்த சேதமடைந்து முற்றாக அழிவடைந்திருந்தது.
இதனால் அப்பகுதிக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பெய்லி பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளை மிக விரைவாக நிறைவு செய்து, மக்களின் பாவனைக்காகவும் வாகனப் போக்குவரத்திற்காகவும் பாலத்தைத் திறந்துவிட வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.


















