-செ.கபிலன்-
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகுடன் இலங்கை கடல் பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றசாட்டில் இவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்


















