2024 உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 239 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில் 2024 இதே காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி 223 மில்லியன் கிலோகிராமாக மாத்திரமே காணப்பட்டதாகவும் அச் சபை குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதி அதிகரித்ததால் தேயிலை ஏற்றுமதி வருமானம் 1.4 பில்லியன் ரூபாயால் உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 97 மில்லியன் அதிகரிப்பு எனவும் இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.


















