மஹர சிறைச்சாலையிலுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
இந்நிலையில் புலி புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் நாமல் எம்.பி. கருத்து வெளியிடுகையில் குற்றஞ்சாட்டினார்.


















