முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அம்மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய நான்கு மாடி மருத்துவ விடுதி தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொதுமக்களுக்குக் குறைந்த செலவில் உயர்தரமான மற்றும் தொடர்ச்சியான மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இந்த மருத்துவமனையைத் தரம் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய விடுதித் தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது பூரண அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்த நிர்மாணப் பணிகளைத் துரிதமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


















