2050ம் ஆண்டில் காபன் உமிழ்வை பூச்சியமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமை மன்னாரில் 50 மெகாவோட் மின் உற்பத்திற்கான காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 20 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்து வைத்தார்.
தேசிய பொங்கல் விழாவுக்காக வடமாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, ஊநுலுடுநுஓ சுநநெறயடிடநள நிறுவனத்தின் 20 மெகாவோட் கொள்ளளவை கொண்ட மன்னார் விண்ட்ஸ்கேப் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் உத்தியோகபூர்வமாக இணைத்துவைத்தார்.
உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதால், வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்குச் செல்லும் பாரிய வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளதோடு, இது உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த பங்களிப்பு செய்கிறது.
தொடர்ந்து, ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின் 50 மெகாவோட் கொள்ளவுள்ள காற்றாலை மின் திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்விலும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ஹேலிஸ் பென்டன் மற்றும் ஹேலிஸ் குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனம், இலங்கை மின்சாரசபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.


















