-த.சுபேசன்-
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொங்கல் தினமான நேற்று அதிகாலை 5.05 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி மணலுடன் பயணித்திருந்த மேற்படி டிப்பர் வாகனம் ஏ-32 வீதியில் நாவற்குழி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து விபத்தக்குள்ளானது. சும்பவத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஊயிரிழந்த இளைஞர்களில் ஒருவருடைய சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையிலும், மற்றொருவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது. விபத்தக்கான காரணம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















