குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஐவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மதியம் இடம்பெற்றது.
மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்டத்தில் பணி புரிந்து கொண்டு இருந்த வேளையில் அதிக உஷ்ணம் காரணமாக குளவி கூடு கலைந்து கொட்டியதில் ஆண் தொழிலாளர்கள் ஐவர் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நல்லதண்ணி பகுதியில் அதிக உஷ்ணம் நிலவி வரும் நிலையில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் ரத்து அம்பலம் பகுதியில் உள்ள குளவி கூடு கலைந்து வெளிநாட்டுப் பயணி ஒருவரும், உள்நாட்டு யாத்திரிகர்கள் ஐந்து பேரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


















