-த.சுபேசன்-
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலைப் பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவருடைய துவிச்சக்கரவண்டி நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதிக்கு கடமைக்கு செல்வதற்காக மீசாலை புகையிரத நிலையப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இது குறித்து சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மேற்படி திருட்டுச் சம்பவம் அங்குள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















