-கமத்தொழில் அமைச்சர் அறிவிப்பு-
வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்.வன்னி உட்பட வடக்கு, கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதில் வழங்கியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.


















