உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 12000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை 385,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்றைய தினம் 397,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கடந்த வாரம் 356,000 ரூபாவாக இருந்த 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் 362,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.


















