முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று புதன்கிழமை தொடக்கம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அந்தவகையில் வெள்ளை, சிவப்பு நாட்டரிசி கிலோ 120, சிவப்பு, வெள்ளை சம்பா கிலோ 130, கீரிசம்பா கிலோ 140, ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. கொள்வனவு செய்யப்படும் நெல் ஈரப்பதன் 14 வீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும். நெல்லுடன் ஏனைய கலப்படங்கள் ஒரு வீதத்திற்குட்பட்டதாகவும் ஏனைய நெல்லினங்களின் கலப்பு 6 வீதத்திற்குட்பட்டதாகவும் சப்பி 9 வீதத்திற்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

















