-சொ.வர்ணன்-
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


















