-கஜிந்தன், க.சபேஷன்-
வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளமை குறித்து எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? இவ்வாறானவர்கள் குறித்த பட்டியலை தரவா என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை பொலிஸாரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
வலி. மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று சங்கானையிலுள்ள பிரதேச செயக மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பி மேலும் தெரிவிக்கையில்:
வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளனர்.இவர்கள் எப்படி திடீர் பணக்காரர்கள் ஆனார்கள், பொலிஸார் எவ்வாறு அவர்களுடன் நல்லுறவில் உள்ளமை குறித்து மக்கள் காணொளி ஆதாரத்தை எமக்கு தந்துள்ளனர்.
திடீர் பணக்காரர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றோம். சங்கானை பிரதேச செயலர் பிரிவிலும் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளதாக எமக்கும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறானவர்கள் குறித்தான தகவல்களை மக்கள் மேலும் எங்களுக்கு வழங்க முன்வர வேண்டும். இதுவரை எங்களுக்கு கிடைத்த தகவல்களை நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
பொலிஸாருக்கு முகவர்கள் இருக்கின்றனர். நாங்கள் அது குறித்து அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றோம் என்றார்.


















