-சு.பாஸ்பரன்-
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இருந்து ஏ-35 வீதிவழியாக சட்ட விரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் மீது நேற்று அதிகாலை 2.15 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை துரத்தி வந்த பொலிசார் குறித்த வாகனத்தை நிறுத்த முற்பட்டபோதும் வீதியில் நீண்ட தூரத்துக்கு மணலை கொட்டி விட்டு டிப்பர்வாகனம் தப்பிச் செல்ல முயற்சித்த போது முரசுமோட்டை பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


















