-36 சிறுவர்கள் பாதிப்பு – இருவர் கைது-
கண்டி – பேராதனை பகுதியில் 36க்கும் மேற்பட்ட சிறுவர்களை அச்சுறத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொதுமகன் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பேராதனை பகுதியில் தேங்காய் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதான சந்தேகநபர் ஒருவரும், பொறியியலாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக சிறுவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு மேலதிக வகுப்புகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் காட்சிகளை, இரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ள சந்தேகநபர், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும், 3 இடங்களில் வைத்து இவ்வாறு, துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர்களுடன் மேலும் 5 பேர் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களையும் கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்கள் இருப்பார்களானால், அவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















