இலங்கையிலுள்ள சகல முச்சக்கர வண்டிகளும் செயலியை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முறையான சேவையை வழங்குதல், கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத நிலவரப்படி,
இலங்கையில் பிக்மீ – ஊபர் மற்றும் HelaGo ஆகியவை, முக்கிய முச்சக்கரவண்டி அழைப்பு செயலிகளாக செயல்படுகின்றன. முச்சக்கர வண்டிகள் தற்போது டெக்ஸி என்ற வாடகை வகையில் அடங்குவதால், அவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயலி அடிப்படையிலேயே இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















