டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலையானது வெளிநாட்டு சந்தைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுசாந்தா டி சில்வா தெரிவித்தார்.
சில நாடுகள் பிற விநியோகஸ்தர்களை நாடும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்பால் நாட்டின் தேயிலைத் தொழில் ஒரு மில்லியன் கிலோகிராம் உற்பத்தியை இழந்தது.
ஒரு காலத்தில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் அந்த நாடுகளை இழந்தோம்.
ஆனால் நாங்கள் இன்னும் 265 மில்லியன் கிலோவை ஏற்றுமதி செய்கிறோம்.
இலங்கை 140 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்கிறது.
ரஸ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகியவை முக்கிய இறக்குமதியாளர்களாக உள்ளன.
2024 ஆம் ஆண்டில், இலங்கை 245.7 மில்லியன் கிலோவை ஏற்றுமதி செய்தது.
2025 ஆம் ஆண்டில் 11.65 மில்லியன் கிலோவால் அதிகரித்து 257.44 மில்லியன் கிலோவை ஏற்றுமதி செய்ததாகக தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுசாந்தா டி சில்வா தெரிவித்தார்.


















