-க.சபேஷன்-
யாழ்.நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியார் காணியில் நேற்றுமுன்தினம் துப்புரவுப் பணிகள் இடம்பெற்றது.
இதன்போது சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றினை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல், வழங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொதியை சோதனையிட்டபோது, அதனுள் வெடிக்காத நிலையிலிருந்து துப்பாக்கி ரவைகள், கைக்குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் உள்ளமை அவதானிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பொதி முழுமையாக மீட்கப்பட்டதன் பின்னரே அதற்குள் என்ன உள்ளது என்பதை உறுதியாக கூற முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.


















