-தினசரி 100 நோயாளிகள் பதிவு-
இலங்கையில் தினசரி 100 புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி ஹம்சக விஜேமுனி கூறியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புற்றுநோயை முன் அறியும் புதிய மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாட்டின் 6 பிரதான வைத்தியசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான மத்திய நிலையங்கள் இயங்கி வருகின்றன.
பதிவாகும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோயினால் ஒரு நாளைக்கு சுமார் 40 பேர் உயிரிழக்கின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர். அவர்களில் மூவர் தினசரி உயிரிழக்கின்றனர் என்றார்.


















