தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அடிக்கடி தீர்ந்து விடுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ். நகர்ப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வார இறுதி நாட்களில் எரிபொருள் விற்றுத் தீர்ந்து விடுகின்றது.
குறிப்பாக இவ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் கையிருப்பு தீர்ந்து விடுவதால் வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்பவரும் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இரவு நேரங்களில் நம்பி பெற்றோல் நிரப்பவரும் வாகனங்கள் பெற்றோல் நிரப்பமுடியாத நிலையில் அலைக்கழிக்கப்படுகின்றனர். வாகன பாவனைக்கு ஏற்ப குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை சேமிப்பில் வைப்பதன் மூலம் நுகர்வோரின் சிரமங்களை திர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் அக்கறை கொண்டு வாகனங்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் கிடைக்கும் வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுக்கின்றனர்.


















