-களுகங்கை அருகில் உருவாக்க திட்டம்-
நாட்டின் முதலாவது குரங்குகள் சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இந்த மையத்தை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குரங்குகளுக்கான நீர், உணவு மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கி சுமார் 150 ஹெக்டேயர் காணியில், இது நிறுவப்படவுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை நிர்மாணிக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் பரிந்துரைத்துள்ள நிலையில், மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மலேசியா உட்பட பல நாடுகளில் இதுபோன்ற சரணாலயங்கள் செயற்பட்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்தார்.


















