அயர்லாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் காமில் மிஷார 14, பெத்தும் நிஸ்ஸன்க 24, பவன் ரத்நாயக்க 5, துனித் வெல்லாலகே 10 ஓட்டங்களை பெற்றனர்.தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஜோர்ஜ் டொக்ரெல் 2 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஸ்டேர்லிங் 6, மார்க் அடயார் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து லோக்கன் டக்கர் 21, ஹெரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக கமிந்து மெண்டிஸ் தெரிவானார்.


















