-சு.பாஸ்கரன்-
கொக்கிளாய் பாலத்தை மீளமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், 2027 பாதீட்டில் பாலத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கொக்கிளாய் – புல்மோட்டை பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாய்வு அறிக்கையை அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்தால், பாலத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய முடியும்.
இத்திட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளார், எனக் குறிப்பிட்டார்.


















