-தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவர் கைது-
நாட்டில் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக, ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
அகழ்வாராய்ச்சி இயந்திரங்களை கொள்வனவு செய்யும் போது, நடைமுறைகளை மீறி அரசாங்கத்திற்கு 41 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு இயந்திரப் பொறியியலாளர் மற்றும் தனியார் நிறுவனமொன்றின் உதவி மேலாண் பணிப்பாளர் ஆகியோரும் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


















