போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுபட்ட ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பஸ் பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பஸ் ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 170 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்தனர்.


















