-செ.ரவிசாந்-
அகில இலங்கை சைவமகா சபை வழங்கும் அன்பே சிவம் 2026 ஆம் ஆண்டுக்கான உயரிய விருது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக அல்லலுறும் மக்களுக்கு மனிதநேய ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வருவதைப் பாராட்டியே இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சைவமகா சபை நிர்வாகம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.


















