காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, குறித்த பெண்ணுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபர், இன்று வெள்ளிக்கிழமை உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


















