-கூறுகிறது அநுர அரசாங்கம்-
நாட்டிலுள்ள ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது எதற்காக இந்த மாநாட்டை அவர்கள் நடத்தினார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, அதில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியாது.
அரசாங்கத்தக்கு எதிராக எங்கு போராட்டம், மாநாடுகள் நடக்கிறது. அங்குச் சென்று அமர்ந்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தவறான செயற்பாடுகளுக்கு துணைசெல்ல வேண்டாம் என்று எதிர்;க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


















