-விவசாயிகள் சுட்டிக்காட்டு-
-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள பன்னங்கண்டி மற்றும் சின்னக்காடு கமக்கார அமைப்புகளின் ஆயுட்காலம் நிறைவடைந்தும் இதுவரை குறித்த அமைப்புக்களுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
ஏற்கனவே குறித்த அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடந்த காலங்களில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட நிதி மற்றும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான கணக்கறிக்கைகள் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கப்படவில்லையெனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே கமநல சேவை நிலையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக கமக்கார அமைப்புக்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் நடந்த மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தின் போது ஒவ்வொரு ஆண்டும் கமக்கார அமைப்பினுடைய புதிய நிர்வாகிகள் தெரிவு மேற்கொள்ளப்படும் என கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் மூன்று ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இவ் அமைப்புக்கான நிர்வாக தெரிவுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


















